நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் எதிர்வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இதனை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், அஜித்குமார் நடிக்கும் குப் பேட் அக்லி படத்திற்காக தனது உடல் எடையை குறைத்த அஜித்தின் இளமையான தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது அதே லுக்கில் விடாமுயற்சியின் இறுதிச் சூட்டிங்கிலும் அஜித் நடிக்க உள்ளார். அதற்கான புகைப்படமும் வெளியாகி வைரலாகி உள்ளது.
குறித்த புகைப்படத்தில் கோட் சூட்டில் அஜித் குமாரை பார்த்த ரசிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் இவர் நடித்திருக்கலாம். அந்த அளவுக்கு செம்மையா இருக்கின்றார் என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
மேலும் நடிகை திரிஷா விஜய் உடன் சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி வரும் நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் படப் படிப்பிற்காக மீண்டும் அஜித் குமாருடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு அஜித் குமார், திரிஷா மற்றும் இந்த படத்தின் இயக்குனரான மகிழ் திருமேனி உள்ளிட்ட பட குழுவினர் பங்கேற்ற காட்சிகள் வெளியாகி வைரலாகி உள்ளன.
Listen News!