கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்
நடிக்கும் படம் என்றாலே அது
பஞ்சாயத்து இல்லாமல் வெளிவந்தது இல்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அவர் நடித்து வரும்
‘கோட்’ படத்திலும் ஒரு பஞ்சாயத்து வந்துவிட்டதாக
தெரிகிறது.
விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பதும் நீண்ட
இடைவேளைக்கு பின்னர் விஜய் - யுவன்சங்கர் ராஜா இணைவதால் இந்த
படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘கோட்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை பிரபல இசை நிறுவனம் ஒன்று
24 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதில் தான் திடீரென பஞ்சாயத்து
ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் உள்ள லிரிக்ஸ் பாடல்
வீடியோவை சமூக வலைதளமான யூடியூபில்
வெளியிட்டால் கோடி கணக்கில் வருமானம்
வரும் என்று கணக்கு போட்டு தான் 24 கோடி ரூபாய்க்கு அந்த
மியூசிக் நிறுவனம் சம்மதித்ததாகவும் குறிப்பாக விஜய் பாடும் பாட்டை யூடியூபில் போட்டால் வியூஸ் அள்ளும் என்பதால் நல்ல வருமானம் கிடைக்கும்
என்றும் அந்த நிறுவனம் எதிர்பார்த்தது.
ஆனால் ‘கோட்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கி உள்ள சன் டிவி
யூட்யூபில் பாடல்களை பதிவு செய்யும் உரிமை தங்களுக்கு தான் உள்ளது என்றும்
தங்களைத் தவிர வேறு எந்த
நிறுவனமும் யூடியூபில் பாடல்களை பதிவு செய்ய கூடாது என்றும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த அந்த மியூசிக் நிறுவனம்
யூடியூபில் பாடல்கள் போடும் உரிமை எங்களுக்கு கிடைக்காவிட்டால் வெறும் 10 கோடி மட்டும் கொடுப்போம்
என்று கூறியுள்ளது. இதையடுத்து இது குறித்த பஞ்சாயத்து
தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சன்
டிவி மற்றும் மியூசிக் நிறுவனம் ஆகிய இரண்டையும் அழைத்து
ஏஜிஎஸ் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Listen News!