• Jan 18 2025

இன்னும் வெளிய வரமுடியவில்லை... மாரி செல்வராஜிக்கு நன்றி சொன்ன மக்கள் செல்வன்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

மக்கள் மனதினை வென்ற திரைப்படமாக மாறி செல்வராஜின் வாழை படம் இருக்கிறது. அனைத்து ரசிகர்களிடமிருந்தும் நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. மேலும் பல இயக்குனர்கள் ,நடிகர் என அநேகமானோர் இந்த படம் குறித்து உருக்கமாக பேசி இருந்தனர். 


இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி வாழை படம் பார்த்த பிறகு இவ்வாறு தனது கருத்தை பதிவிட்டிருந்தார். ரொம்ப அற்புதமான திரைப்படம். படம் முடிந்தமாதிரி தெரியவில்லை அதுக்குள்ளேதான் இருக்கிறோம். அதில் அவர் பேசிய வசனமாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும் நடிச்ச எல்லாரும் அந்த ஊருல அந்த வாழ்க்கைக்கு மத்தில அந்த ஊர்காரர்களில் ஒருவராவும் அங்க இருந்து இன்னும் வெளிய வரமுடியாமத்தான் மாட்டி கொண்டு இருக்கிறோம். 


மாரி செல்வராஜ் சாருக்கு ரொம்ப நன்றி இந்த மாதிரி படம் எடுத்ததற்கு செய்திகளில் கேட்க்கும் போதும் செய்தி தாள்களில் வரும் போதும் பாக்குற கேக்குற விடயங்கள் எல்லாம் இவ்வளோ அழுத்தமாக பதிய வைத்ததுக்கு நன்றி படத்தை தியேட்டரில் வந்து பாருங்க நல்ல அனுபவம் கிடைக்கும் என்று உருக்கமாக கூறியுள்ளார். இதனை தனது டுவிட் பக்கத்தில் ஷேர் செய்த மாரிசெல்வராஜ் வாழை திரைப்படத்தை பார்த்த பின்  தன் உணர்வை பெரும் உருக்கத்தோடு பகிர்ந்துகொண்ட தமிழ்சினிமாவின் மக்கள் செல்வன் அவர்களுக்கு எங்கள் நன்றியும் ப்ரியமும் என்று ஷேர் செய்துள்ளார்.


Advertisement

Advertisement