• Jan 19 2025

கவின் 4 கோடி சம்பளமா கேட்கிறாரு.. அசோக் செல்வனும்...? நடிகர்களை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களுள்  கவின் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமாக காணப்படுகின்றார்கள்.

கவின் நடித்த டாடா படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஸ்டார் திரைப்படமும் ஓரளவு வரவேற்பு பெற்றது.

நடிகர் அசோக்செல்வனும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இறுதியாக நடித்த ப்ளூ ஸ்டார், போர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டது.

இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் தற்போது தமது இஷ்டத்துக்கு ஏற்ற போல் சம்பளத்தை உயர்த்தி கேட்பதாகவும் இதனால் தயாரிப்பாளர்களின் நிலையை கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதாவது தற்போது டாடா படத்திற்கு பிறகு கவின் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருவதால் தனது சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தியுள்ளார் கவின். அதே போலவே ஆரம்பத்தில் குறைய சம்பளம் பெற்று வந்த நடிகர் அசோக் செல்வனும் இரண்டு கோடி ரூபாய் கேட்கின்றாராம்.

இதன் காரணத்தினால் தயாரிப்பாளர்களுக்கு என்ன லாபம் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை எனவும் அந்த காலங்களில் எம்ஜிஆருக்கு கூட கண்டிஷன் போட்டு தான் ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று சம்பளத்தை உயர்த்தியதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

Advertisement

Advertisement