• Apr 25 2025

"கேங்கர்ஸ்" படத்திற்கு முதல் நாளே கிடைத்த அமோக வரவேற்பு..! கோடிக்கணக்கில் குவியும் வசூல்!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

"கேங்கர்ஸ்" திரைப்படம்  நேற்றைய தினம் திரையரங்குகளில்  வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்று வருகின்றது. சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணியில் உருவான நகைச்சுவைப் படமாக இது திரையரங்குகளில் காணப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது இப்படம் முதல் நாளே நல்ல வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


நீண்ட இடைவெளிக்கு பின்னர் உருவாகிய இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இப்படத்தில் கேத்ரின் தெரசா , வாணி போஜன் மற்றும் பகவதி பெருமாள் எனப் பலர் நடித்துள்ளனர். அத்துடன் இப்படத்தின் பாடல்களை இசையமைத்தது சத்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இப்படம் இந்தியளவில் தற்பொழுது வசூல் ரீதியிலும் சாதனை படைத்து வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திரைக்கு வந்த முதல் நாளே கிட்டத்தட்ட  ஒரு கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement