பிரபல ஹாலிவுட் இயக்குநர் டிம் பர்டன் இயக்கிய ‘Wednesday’ (வென்ஸ்டே) என்ற காமெடி கலந்த திரில்லர் தொடர், நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. கடந்த ஆண்டு வெளியாகிய வென்ஸ்டே சீசன் 1, உலகளாவிய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதில் மைய கதாபாத்திரமான வென்ஸ்டே அடாம்ஸாக, ஜென்னா ஒர்டேகா தனது சிறப்பான நடிப்பால் பாராட்டுகளை பெற்றார்.
இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து, வென்ஸ்டே சீசன் 2க்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுப்பெற்றது. அந்த எதிர்பார்ப்புக்கு இணையாக, சீசன் 2ல் அதிக திரில், சஸ்பென்ஸ், அதிரடி காட்சிகள் மற்றும் எமோஷனல் தருணங்களுடன், இந்த தொடரின் கதைக்களம் மேலும் திகிலூட்டும் வகையில் அமைந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் வென்ஸ்டே சீசன் 2 இன் முதல் 4 எபிசோட்கள் நெட்ப்ளிக்ஸில் வெளியானது. தற்போது, ரசிகர்களுக்காக மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டுள்ள சீசன் 2ன் கடைசி 4 எபிசோட்கள், நாளை (செப்டம்பர் 3) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மற்றும் சீரிஸ் விமர்சகர்கள் இந்த கடைசி எபிசோட்களில் என்ன புதுமைகள் இருக்கப் போகின்றன, கதையில் என்ன திருப்பங்கள் இருக்கும் என்பதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!