பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மதராஸி திரைப்படம், செப்டம்பர் 5-ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
அண்மையில் வெளியான 'மதராஸி' டிரெய்லர் இணையத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'மதராஸி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாதில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தெலுங்கில் பேசிக் கொண்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவர் கூறியதாவது: "மகேஷ் பாபு, சிரஞ்சீவி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றிய முருகதாஸ் சார் இயக்கத்தில் நான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகுந்த பெருமை அளிக்கிறது. அனிருத் அவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி."
படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று மாலை முதல் துவங்குகிறது. ரசிகர்கள் இந்த ஆக்ஷன் மற்றும் உணர்வுபூர்வமான படத்தை திரையரங்கில் அனுபவிக்க தயாராக இருக்கின்றனர்!
#Sivakarthikeyan Spoke Telugu Superbly at #Madharaasi Telugu Event ⭐:
"#ARMurugadoss sir Directed Mahesh Babu & Chiranjeevi like big stars.. I'm very happy to work with him.. Madharaasi is a Solid film.. My Best friend Anirudh is a Hit machine..💥" pic.twitter.com/RPUlOE7lh6
Listen News!