• Mar 14 2025

குட் பேட் அக்லியின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு! கொண்டாட ரெடியாகும் ரசிகர்கள்!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக தனக்கென அதிகளவு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் அஜித் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகின்ற படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே வலிமை மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களில் ஸ்டைலிஷ் மற்றும் மாஸான தோற்றத்தில் நடித்திருந்தார். இப்போது, அவர் முழுமையான ஒரு அதிரடி வேடத்தில் களமிறங்கியுள்ளார்.


இந்த திரைப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் தெலுங்கில் பல பெரிய ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இப்போது தமிழிலும் அதே வலிமையுடன் படம் எடுக்கிறார்கள் என்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இவரும் அஜித்தும் இணைந்து மங்காத்தா படத்தில் நடித்துள்ளனர். அதன்பிறகு, அவர்கள் மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் கதையின் முக்கியமான பகுதியில் த்ரிஷா பங்கு பெறுகிறார் எனக் கூறப்படுகிறது.


இந்த படத்தில் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அவர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில், அஜித் மாஸான ஒரு தோற்றத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். படம் வித்தியாசமாக இருக்கும் என்பதை டீசர் காட்டியுள்ளது. இதில் அஜித் ஒரு வன்முறைச் சூழலிலிருந்து வெளியேற முயலும் ஒரு மனிதராக இருப்பார் என்பது புரிகிறது.

தற்பொழுது படத்தின் கதை வெளியாகியுள்ளது. அதில் "ஒரு அச்சமற்ற டான், தனது குடும்பத்துடன் நிம்மதியாக வாழ முயற்சிக்கிறார். ஆனால், தனது இரக்கமற்ற வாழ்க்கை முறையில் வாழ்ந்தாலும் கடந்த காலம் அவரை தொடர்ந்து பிரச்சனையில் ஆழ்த்துகிறது. ஒரு கட்டத்தில், அவரது கடந்த கால செயல்கள் கடுமையாக தாக்க ஆரம்பிக்கின்றன. அவற்றை அவர் எப்படி எதிர்கொள்கிறார். மீண்டும் வன்முறையை தழுவுவாரா? என்பது தான் இப்படத்தின் கதை. இந்த தகவல் வெளியானவுடனே ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement