• Mar 14 2025

இவளா வயசிலும் செம கியூட்டா காட்சியளிக்கும் ரம்பா...! – ரெண்டான லேட்டஸ்ட் வீடியோ!

subiththira / 8 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த ரம்பா நீண்ட இடைவெளிக்கு பிறகு சமூக வலைதளங்களில் மீண்டும் கலக்கி வருகின்றார். அவரது சமீபத்திய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, தனது வசீகர நடிப்பு மற்றும் கவர்ச்சியான ஸ்டைல் என்பவற்றால் பெரும் ரசிகர் பட்டாளத்தையே  உருவாக்கினார். தற்போது, அவருடைய வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. அதில் 'இன்னும் இவளவு அழகா இருக்காங்களே?' என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 


அந்த வீடியோவில், தனது மின்னும் தோற்றம் , ஸ்டைலிஷ் உடை மற்றும் இனிமையான புன்னகையுடன் ரசிகர்களுக்கு தனது வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அவரது இளமை குறையாத அழகைப் பார்த்து வியப்பில் மூழ்கியுள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு, திரைத்துறையில் இருந்து விலகியுள்ள ரம்பா, தற்போது தனது குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட்டு வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்தும் தன் வாழ்க்கை தொடர்பான அழகான தருணங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றார்.




Advertisement

Advertisement