• Jan 16 2026

சிறிய இடைவேளைக்கு பிறகு! புதிய வெப்தொடரில் சமந்தா! மகிழ்ச்சியில் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் நடிகை சமந்தா. இவர் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என தென்னிந்திய சினிமாவில் ரவுண்டு கட்டி நடித்து வருகின்றார். அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட போதும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்.


தற்போது சமந்தா, பாலிவுட் இயக்குனர ராஜ் இயக்கிய சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார் அடுத்ததாக ரகத் பிரம்மாண்ட என்ற புதிய வெப் தொடரில் களமிறங்குகிறார் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 2018ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 'தும்பதி' படத்தை இயக்கிய ராஹி அனில் பார்வே இயக்குகிறார். 


அதித்யா ராய் சுபூர் மற்றும் வாமிகா கபி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பை துவங்கியது குறித்து சமந்தா இன்ஸ்டாவில் 'கனவு காண்பதை நிறுத்தாதீர்கள் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்புக்கு வந்ததில் மகிழ்ச்சி எனப் பகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அவரை மீண்டும் சினிமாவில் பார்ப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துவருகின்றனர். 



Advertisement

Advertisement