தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான அஜித் குமார், தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் "குட் பேட் அக்லி". இப்படம் பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் அஜித் ரசிகர்களுக்கு படத்தை திரையில் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றது.
அந்த வகையில், இன்று வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மாலை 5.50 மணிக்கு, இப்படத்தின் 2வது பாடலின் புரோமோ வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'குட் பேட் அக்லி' படம், ஏற்கனவே தனது பர்ஸ்ட் பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்பொழுது இரண்டாவது பாடலின் புரோமோ வெளியீடு தொடர்பாக அவர்கள் வெளியிட்ட தகவல் ரசிகர்களிடம் புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிற இப்படம், இசை ஆர்வலர்கள் மற்றும் தல ரசிகர்கள் மத்தியில் புது அனுபவத்தை கொடுக்கப் போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 10 திரையரங்குகளுக்கு வெளியாக உள்ள நிலையில் தற்பொழுது வெளியான தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!