தமிழ் சினிமாவில் "தாஜ்மகால் " திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மனோஜ் காலமானார். அவருக்கு வயது 48. இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த மனோஜ் தற்போது உயிரிழந்துள்ளார். பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் அந்த படத்தால் பெரும் புகழ் பெற்றார்.
இந்த நிலையில் இவர் மன உளைச்சல் காரணமாக மரணமடைந்துள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இது குறித்து இயக்குநர் பேரரசு "மனோஜ் பாரதிராஜா மன உளைச்சலால் தவறிட்டாருன்னு நிறைய பேர் சொல்றாங்க. அப்படின்னு உங்ககிட்ட யாராவது சொன்னாங்களா.எனக்கு மன உளைச்சல் என்று உங்ககிட்ட அவர் பகிர்ந்து கொண்டாரா? நான் அவங்க ஆபீசுக்கு அடிக்கடி போவேன். எப்பவுமே சிரிச்ச முகத்தோட சந்தோஷமாகத்தான் இருப்பாரு. அவருடைய மறைவுக்கு உடல்நிலை தான் காரணமே தவிர மனநிலை இல்லை. தேவையில்லாமல் பழி சுமத்த கூடாது" எனக் கூறியுள்ளார்.
Listen News!