• Feb 05 2025

சிறுநீரக நோயால் பிரபல மூத்த திரைப்பட இயக்குநர் காலமானார்...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல மூத்த இயக்குநரும், திரைக்கதை வசனகர்த்தவுமான ஷியாம் பெனகல் நீண்ட நாட்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமாகியுள்ளார். இந்த செய்தி திரைத்துறையினருக்கு அதிர்ச்சியைய் ஏற்படுத்தியுள்ளது. 


இந்தி திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், வசனகர்த்தா எனப் பன்முகங்களைக் கொண்டிருந்த ஷியாம் பெனகல் காலமானார். இதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 90 வயதான அவர் நீண்டகால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே காலமானார்.


d_i_a

இவர் இயக்கத்தில் உருவான அங்கூர், பூமிகா, ஜூனுன், அரோஹன், மந்தன் உள்ளிட்ட 7 படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர் என்ற பெருமையும் இவரையே சாரும். இந்நிலையில் இவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement