• Dec 25 2024

காதலருடன் ஏர்போர்ட் வந்த நடிகை ராஷ்மிகா..! வசமாய் சிக்கிய வீடியோ வைரல்..!

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாகவும், ஒன்றாக இருவரும் சுற்றுவதாகவும் அவ்வப்போது செய்திகள் இணையத்தில் ட்ரெண்டாகும். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக ஏர்போட் வந்திருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


நேஷ்னல் கிரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா தனது நடிப்பினால் அணைத்து ரசிகர்களையும் கட்டி போட்டுவைத்துளார். அனிமல், புஷ்பா 2 போன்ற படங்களில் மூலமாக ராஷ்மிகாவின் கெரியர் தற்போது உச்சத்தில் இருக்கிறது.  இப்படி இருக்க இவரின் ரகசிய காதல் குறித்த செய்திகள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வருகிறது. 


இந்நிலையில் நடிகை ராஷ்மிகா- விஜய் தேவாரகொண்டாவுடன் ஒன்றாக ஏர்போர்ட் வந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இருவரும் காதலர்கள் என்று பலர் கூறிவந்தாலும். இன்னும் இவர்கள் வெளிப்படையாக கூறவில்லை, ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். கூடிய விரைவில் ரசிகர்களுக்கு தங்களத்து காதல் பற்றி கூறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement