மராத்தி மற்றும் ஹிந்தி தொலைக்காட்சி உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர், நடிகை பிரியா மராத்தே. பல வருடங்களாக புற்று நோயுடன் போராடி வந்திருந்த இவர், இன்று தனது 38வது வயதில், மும்பையில் உள்ள தனது வீட்டில் காலமானார் என்ற செய்தி திரையுலகினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா மராத்தே, கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டுவருகிறார் என்பது அவருடைய நெருக்கமான வட்டத்திலுள்ளவர்களுக்கே தெரிந்திருந்தது. பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடம் இச்செய்தி பகிரப்படாமல் இருந்தது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளைக் கடந்து வந்த பிரியாவிற்கு கடந்த சில மாதங்களாக மீண்டும் நோய் தீவிரமடைந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் இன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். அவரது இறப்புச் செய்தி, திரைத்துறையிலும், தொலைக்காட்சி உலகிலும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!