• Feb 22 2025

விஜய்- விஜயகாந்த் மகனுக்கு செந்தூரபாண்டியாக வரணும்.. அஞ்சலி செலுத்திய பிரபல நடிகை பளிச் பேட்டி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகை அம்பிகா விஜய்காந்த் மகன் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடித்து வெற்றியை கொடுக்க வேண்டும் என பேசியுள்ளார். கடந்த டிசம்பர் மாத இறுதியில் கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.


 அவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல லட்சம் பேர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.சமீபத்தில் நடிகை அம்பிகா வந்து அஞ்சலி செலுத்தி சென்ற நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தளபதி விஜய் விஜயகாந்த் மகனுக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். 


விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தேமுதிக கட்சியை அம்மா பிரேமலதாவுடன் இணைந்து வளர்க்க பாடுபட்டு கொண்டிருக்கிறார். அப்பாவிடம் தான் கடைசியாக சொன்ன உறுதிமொழியை இப்போ சொல்ல மாட்டேன். விரைவில் உங்க எல்லாருக்கும் தெரியும்படி செய்வேன் என நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியலில் அப்பாவை போல பெரிய ஆளுமையாக வருவேன் என்பது குறித்து மறைமுகமாக பேசியிருந்தார்.


இந்நிலையில், விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகை அம்பிகா விஜய்க்கு எப்படி விஜயகாந்த் செந்தூரபாண்டியா வந்து உதவி செஞ்சாரோ அதே போல சண்முக பாண்டியனுக்கு விஜய் செந்தூரப்பாண்டியா வந்து உதவி செய்யணும் என நடிகை அம்பிகா தனது கோரிக்கையை வைத்திருக்கிறார்.

Advertisement

Advertisement