• Aug 15 2026

ஈஸ்வரியின் நாறவாயால் வீட்டில் வெடித்த பூகம்பம்.. அமிர்தா எடுத்தா அதிரடி முடிவு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி அமிர்தாவுக்கு குழந்தை விஷயத்தைப் பற்றி பேசியதோடு கணேஷ் பற்றியும் இழுத்து பேசுகின்றார்.  பாக்கியா எவ்வளவு சொல்லியும் ஈஸ்வரி கேட்கவில்லை. அமிர்தா அழுது கொண்டிருக்க அவரை போகுமாறு பாக்கியா அனுப்பி வைக்கின்றார்.

அதன் பின்பு அமிர்தா கோயிலுக்கு சென்று அங்கு எழில் வந்ததும் தான் வீட்டுக்கு போவதாக சொல்ல, எழில் என்ன நடந்தது என்று விசாரிக்கின்றார். ஆனால் பிரச்சனை எதுவும் வேண்டாம் என்று சொல்லி வீட்டில் நடந்தவற்றை அமிர்தா சொல்ல, எழில் நீ வா.. நான் சண்டை போட மாட்டேன் என அமிர்தாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகின்றார்.


இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த எழில் பாட்டி.. பாட்டி.. என கூப்பிட்டு அமிர்தா கிட்ட என்ன சொன்னீங்க என கேட்கின்றார். அதற்கு ஈஸ்வரி அதுக்குள்ள எல்லாத்தையும் பத்தி வச்சிட்டாளா என அமிர்தாவுக்கு பேசுகின்றார். மேலும் தன்னிடம் எல்லாரும் பேரனுக்கு குழந்தை இல்லையா என கேட்பதாகவும் அதனால்தான் அப்பிடி சொன்னதாகவும் சொல்கின்றார்.

இவ்வாறு இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க இடையில் பாக்கியா தான் பாட்டியுடன் பேசுவதாகவும் எழிலை மேலே போகுமாரும் சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement