• Aug 15 2026

விடாமுயற்சி படத்தில் மாஸ் லுக்கில் ரெஜினா..!! சிறப்பு போஸ்டர் இதோ..

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி  ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இந்த படங்களின்  ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது.

விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட ஷுட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகின்றது..

இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்த ரெஜினாவின் கேரக்டர் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.


அதில் அவருக்கு பின்னால் திரிஷா மற்றும் அஜித் இருவரும் இருப்பது போலவும் ரெஜினா கெத்தாக நடந்து வருவது போலவும் போஸ்டர் காட்டப்பட்டுள்ளது.

விடாமுயற்சி திரைப்படம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகின்றது. மேலும் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் அன்று ரிலீசாக  உள்ளதாம். சில மாத இடைவெளியிலேயே அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் உள்ளனர். 

Advertisement

Advertisement