• Nov 28 2025

வசூலில் அடித்து நொறுக்கி சாதனை படைத்த லோகா.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த துல்கர் சல்மான்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வெளியான லோகா திரைப்படம் பான் இந்திய அளவில் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இந்தப் படத்தை  நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார்.

இந்த படம் மலையாள சினிமாவையும் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

லோகா படத்தில் அமானுஷ்ய சக்திகளைக் கொண்ட பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன் அசத்தலாக தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவருடன் நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளனர். 


ஃபேண்டஸி, அட்வென்ச்சர், சூப்பர் ஹீரோ என பல ஜெனரில் லோகா படத்தை தரமான படைப்பாக வழங்கியுள்ளனர் என பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் லோகா திரைப்படம் வெளியான 19 நாட்களில் மட்டும் 250 கோடி வசூல் செய்திருப்பதாக துல்கர் சல்மான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் படத்தின் வசூல் 300 கோடி ரூபாயைத் தாண்ட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement