• Dec 23 2024

மொத்த காசும் அம்பேல்.! மனோஜிக்கு நாமம் போட்ட துபாய் ரீல் ஓனர்! அதிர்ச்சியில் குடும்பம்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  சிறகடிக்க ஆசை சீரியலில் பல சுவாரஷ்யமான திருப்பங்கள் நடந்து வருகிறது. மறைத்து வைத்த பல ரகசியங்கள் வெளியாக இருப்பதாக சமீபத்திய ப்ரோமோவில் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று என்ன நடைபெற இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க. 


கனடாவில் இருந்து வந்த ஜீவாவை முத்து காரில் ஏற்றி கொண்டு செல்கிறார். அப்போது ஜீவா இங்க புது பிளாட் ஒன்று வாங்கி இருக்கேன் அது முடிஞ்சிச்சினா கிளம்பிருவேன், என்கிட்டே இருந்து 30 கோடி கொஞ்சம் சிலவாகிருச்சி என்று சொல்கிறார். என்னோட அண்ணாவையும் ஒரு வீடு வாங்கி இருக்கான் என்று முத்து சொல்கிறார்.  

அண்ணாமலை மற்றும் விஜயா வோக்கிக் செல்லும் போது மனோஜ் வீடு வாங்கியதை பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறார். உனக்கு 10 வீடு வாங்கினாலும் பாத்தது என்று அண்ணாமலை கிண்டல் செய்கிறார். பின்னர் அங்கு இருந்த இளனி கடைக்கு சென்ற அண்ணாமலை என் மகன் அந்த பெரிய வீட்டை வாங்கி இருக்கான் என்று சொல்கிறார். இதனை கேட்ட இளனி விற்பவர் அண்ணாமலை சென்ற பிறகு அந்த வீட்டின் ஓனருக்கு கால் பண்ணி உங்க வீட்டில் ஒரு குடும்பம் குடியிருக்கிறார்கள் என்று சொல்கிறார். 


மற்ற பக்கம் முத்து ஜீவாவை ரெஜிஸ்ட்டர் ஆபிசுக்கு கூட்டிட்டு போகிறார். அங்கு மனோஜ் மற்றும் ரோகிணி  வீட்டை ரெஜிஸ்ட்டர் பண்ணுவது தொடர்பாக கேட்பதற்கு அங்கு வருகிறார்கள். மனோஜை கண்ட ஜீவா கோபத்தில் உள்ளே இருந்து வெளியே வந்து விடுகிறார். திரும்பவும் யாரை பார்க்க கூடாதுனு நினைச்சானோ அவனை தான் பார்த்தேன் என்று சொல்கிறார். முத்து சரி மேடம் கோபப்படாதிங்க என்று சொல்லி விட்டு பிளாட்டுக்கு கூட்டி போகிறார். ஜீவா முத்துவுக்கு கண்ணாடி ஒன்றை பரிசாக கொடுக்கிறார். அதனை போட்டு ஜீவாவுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறார் முத்து.


மனோஜ் தான் வாங்கிய வீட்டின் முன் அமர்ந்து கால் கதைத்து கொண்டு இருக்கிறார். அங்கு வந்த ரோகிணியிடம் வீட்டுக்கு நேம்போட் அடிக்க கொடுத்து இருந்தது இப்போ வந்துரும் என்று சொல்கிறார். ரொம்ப சந்தோஷமா இருக்கு இவ்வளோ பெரிய வீடு நமக்குன்னு சொந்தமா இருக்கு என்று ரோகிணி சொல்லிக்கொண்டிருக்கும் போது கார் ஒன்று வருகிறது. நேம்போட் கொண்டு வந்தவங்க என்று மனோஜ் கதைத்து கொண்டிருக்க யாரு வீட்டுக்கு யார் பெயர் வைக்கிறது என்று வீட்டின் ஓனர்  கோபமாக கேட்கிறார். 


யார் கிட்ட வீடு வாங்குனீங்க? என்று வீட்டின் உரிமையாளர் கேட்க துபாய் பிஸ்னஸ் மேன் கிட்ட இருந்து தான்  வாங்குனோம்னு சொல்கிறார் மனோஜ். அதனைக்கேட்ட ஓனர் அவன் வீட்டு ஓனர் இல்லை இந்த வீட்டுல வாடகைக்கு இருந்தவன் என்று சொல்கிறார் இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். மனோஜ் கால் பண்ணி பார்க்கிறார் ஓனர் என்று பொய் சொன்ன அந்த நபர் கால் எடுக்கவே இல்லை. இதனால் மனோஜ் உட்பட அனைவரும் குழம்பி இருக்கிறார்கள்.  


Advertisement

Advertisement