2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற சிம்பா தி லயன் கிங் திரைப்படத்தில் வந்த சிம்பாவின் அப்பாவான முஃபாசாவின் கதைகளத்தினை மையமாகக்கொண்டு முஃபாசா த லயன் கிங் படம் தற்போது உருவாகி உள்ளது.இப்படத்திற்கு பிரபலங்கள் பலர் குரல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்தப்படத்தில் முஃபாசாவிற்கு அர்ஜுன் தாஸும், டாக்காவுக்கு அசோக் செல்வனும் குரலுதவி செய்திருக்கிறார்கள். நாசர் ரோபோ ஷங்கர், சிங்கம்புலி, விடிவி கணேஷ்ஆகியோர் டப்பிங் செய்துள்ளனர்.ஆரம்ப பாகத்தில் தமிழ் டப்பிங் சரியில்லை எனினும் இரண்டாம் பாகத்திற்கு டப்பிங்கில் கலக்கியுள்ளனர்.
தற்போது முஃபாசாவிற்கு குரல் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் படத்தைப் பார்த்த "சிறு குழந்தைகளிடமிருந்து பல செய்திகள் மற்றும் குரல் குறிப்புகள் வந்துள்ளதாக;அனைவரின் அன்புக்கும் நன்றி! முஃபாசா உங்கள் அனைவருக்கும் நிறைய அன்பை அனுப்புகிறார்"என பதிவிட்டுள்ளார்.
So many messages and voice notes from little kids who watched the film.Thank you for all the love!
Mufasa sends back lots and lots of love to all of you ♥️🤗#MufasaTheLionKing 🦁♥️ pic.twitter.com/kzNWBKzRTh
Listen News!