• Sep 13 2024

த்ரிஷா பற்றி தப்பா பேசல, இந்த பருப்பெல்லாம் என் கிட்ட வேகாது- சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த மன்சூர் அலிகான்

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பின்னர் விஜய் - த்ரிஷா காம்போ லியோவில் இணைந்தது, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், ப்ளாஷ்பேக் போர்ஷனில் விஜய்யுடன் மன்சூர் அலிகானும் நடித்திருந்தார். 

லோகேஷின் ஃபேவரைட் நடிகர்களில் மன்சூர் அலிகானும் ஒருவர். விக்ரம் படம் வெளியான பின்னர் மன்சூர் அலிகான் பற்றி பேசியிருந்த லோகேஷ், அதன் காரணமாகவே லியோவில் அவரை நடிக்க வைத்திருந்தார். லியோ ப்ளாஷ்பேக் முழுவதும் மன்சூர் அலிகான் சொல்வதாக அமைந்திருக்கும். இந்நிலையில் லியோவில் நடித்த த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது சர்ச்சையாகியுள்ளது.


இதற்கு த்ரிஷா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மன்சூர் அலிகான், அய்யா பெரியோர்களே, திடீர்னு நான் த்ரிஷாவை தப்பா பேசிவிட்டேன் என்று, என் பொண்ணு, பசங்க வந்த செய்தியை அனுப்பிசாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகும் நேரத்துல, நான் வர்ர தேர்தல்ல பிரபல கட்சியில் போட்டியிடுறேனு சொன்ன வேளையில் வேண்டுமனே எவனோ கொம்பு சீவிட்டு இருக்கானுங்க.

உண்மையில் அந்த பெண்ணை உயர்வாத்தான் சொல்லி இருப்பேன், அனுமார் சஞ்சீவி மலையை கையில் தாங்கிக் கொண்டு போன மாதிரி,வானத்திலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. அந்த ஆதங்கத்த காமெடியா சொல்லி இருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா, நான் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சரவனா.


நான் இதுவரை 360க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். நான் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுக்கிறவன் என்பது அனைவருக்கும் தெரியும், சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது. வீடியோவை தப்பா கட் பண்ணி காமிச்சு அவங்களை கோவப்பட வெச்சிட்டாங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனையோ பிரச்சனை இருக்கு.. பொழப்ப பாருங்கப்பா என மன்சூர் அலிகான் தனது விளக்கத்தை கொடுத்துள்ளார்.


Advertisement

Advertisement