சினிமாவில் கவர்ச்சியாக நடித்து பல இளசுகளின் மனதைக் கொள்ளைகொண்டிருந்த கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி சினிமாத்துறையினை விட்டு இனி இறைப்பணிக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார். எதனால் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று தெரியுமா?
படத்தில் புவனேஸ்வரி நடிக்கிறார் என்றால் நிச்சயம் கிளுகிளுப்பான காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்றே படம் பார்க்க வந்த இளசுகளின் பட்டாளம் அதிகம். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் புவனேஸ்வரி அதில் தனது தனி முத்திரையைப் பதித்துவிடுவார்.
தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படங்கள் ஏராளம். அது மட்டுமல்ல, சின்னத்திரை சீரியல்களில் வில்லியாக நடித்து அதிக பிரபலமானார். அது பற்றி அவர் கூறியுள்ளதாவது, என் மனதில் திடீரென ஒரு நாள் மாற்றம் ஏற்பட்டது. அதுவே என்னை ஆன்மிக வழியில் அழைத்துச் சென்றது, அப்படியே நானும் பயணிக்கத் தொடங்கினேன்.
என் வாழ்நாளை இறைப்பணிக்காக அர்ப்பணிக்கவும் முடிவு செய்துவிட்டேன்.என் வாழ்க்கையே ஒரு போராட்டம். எதிர்பாராமல் சிக்கிய வழக்கிலிருந்து போராடி வெளியே வந்தேன். ஆனாலும் என்னை இந்த சமூகம் இன்னமும் தவறாகத்தான் பார்க்கிறது. யார் எப்படி பார்த்தால் என்ன? நான் என் வழியில் நிம்மதியாக பயணிக்கிறேன் என்கிறார் சினிமா நடிகை சாரி சாமியாரான புவனேஸ்வரி.
Listen News!