• Mar 17 2025

" ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம்..!" சாய்ரா பானு பேச்சு...

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

முன்னனி இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். மேலும் இதற்கு அவரது மனைவியும் உடன்பாடுள்ள நிலையில் இன்று திடீரென இவர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சாதாரண சோதனைக்காக வைத்தியசாலை சென்றிருப்பதாக கூறியிருந்தார்.


மேலும் அவரது மகனும் தந்தைக்கு நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டதாக ஏ.ஆர்.ஆர்.அமீன் விளக்கமளித்திருந்தார். பலரது சோகங்களின் மருந்திற்கு சிறந்த இசையை வழங்கிய இவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையினால் முதல்வர் ,சினிமா பிரபலங்கள் ,ரசிகர்கள் என பலரும் சோகத்தில் இருந்தனர்.


இந்த நிலையில் தற்போது இவரது மனைவி சாய்ரா பானு “ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம்; நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை!” என கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement