• Oct 08 2024

ரொம்ப சந்தோசப்படாதீங்க மனோஜ்.. பின்னால முட்டிட்டு நிக்க போறீங்க! முத்து கொடுத்த வார்னிங்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் ரோகிணிக்கு தாலி வாங்கி கொடுத்ததோடு விஜயாவுக்கு 15,000 ரூபாய்க்கு சாரி வாங்கி கொடுக்கின்றார். இதன் போது முத்து அப்பாவுக்கு என்ன வாங்கினா? என்று கேட்க, அவர் வாட்ச் வாங்கியதாக கூற, அவருக்கு எதுக்கு வாட்ச் அவர் வேலைக்காக போகப் போகிறார் என விஜயா கூறுகிறார். ஆனால் மனோஜ் அது தனக்காக வாங்கியதாகவும் விலை 51 ஆயிரம் எனவும் சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றார்கள்.

அதன் பின்பு தான் அப்பாவுக்கு வாங்கியதாக ஐம்பது ரூபாய் உடைய டவலை கொடுக்கின்றார். இதை வாங்கி பார்த்த முத்து கோவப்பட, அண்ணாமலை பரவாயில்லை இது சரி வாங்கி கொடுத்திருக்கிறானே என்று போகின்றார்.

அதன் பின்பு ரோகினி இவ்வளவும் வாங்க 5 லட்சம் சரி போயிருக்குமே எப்படி காசு வந்தது? பேங்க்ல எடுத்தியா என்று கேட்க, இல்லை கிரெடிட் கார்டில் வாங்கியதாக சொல்லுகின்றார். மேலும் நீ  என் வாழ்க்கையில் வந்த பிறகு தான் எனது வாழ்க்கை இப்படி அழகா மாறிடுச்சு என ரோகிணிக்கு சொல்லுகின்றார்.

அதன் பின்பு முத்து நபர் ஒருவரை சவாரிக்கு அழைத்துச் சென்று அவரை வீட்டில் விட, அவர் முத்துவுக்கு பணத்தை கொடுத்துவிட்டு காருக்குள் பேக் ஒன்றை மறந்து வைத்துவிட்டு சென்று விடுகிறார். இதனால் முத்து அதனை எடுத்து கொடுக்க வீட்டுக்குள் செல்லும்போது, அங்கு சிட்டி தனது ஆட்களுடன் தகராறு பண்ணிக் கொண்டிருக்கின்றார்.


இதனை பொறுமையாக வீடியோ எடுத்து அதன் பின்பு சிட்டியின் ஆட்களுக்கு அடித்ததோடு, தான் இந்த வீடியோவை போலீசில்  காட்டி உன்னை ஆறு மாசம் உள்ளே தள்ளுவேன் என்று சொன்னதும் சிட்டி  அங்கிருந்து நைசாக நழுவ பார்க்கின்றார்.

ஆனாலும் முத்து அவரை விடாமல் சத்யாவை வைத்து இவர்களால் மாசம் பத்தாயிரம் தான் தர முடியும் என்று கடிதம் எழுதி சயினும் வாங்கி விடுகின்றார். இதனால் எதுவும் செய்ய முடியாமல் சிட்டியும் சைன் பண்ணி கொடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement