• Sep 10 2024

இதுதான் சான்ஸ் என எழில் வாழ்க்கையில் புகுந்த கோபி.. ஈஸ்வரி பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த பாக்கியா

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய்  டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழில் வீட்டை விட்டு போவதை நினைத்து பாக்யாவும் இனியாவும் வருந்திக் கொண்டிருக்க, அங்கு வந்த ஈஸ்வரி நான் இனி  அவனை எதுவும் சொல்ல மாட்டேன் மீண்டும் அழைத்து வருமாறு வருமாறு சொல்ல, வேண்டாம் .. அவன் தனியாக இருக்கிறது நல்லது தான் என்று பாக்கியா  சொல்லுகின்றார்.

அதன் பின்பு இனியா எழிலை நினைத்து அழுது கொண்டிருக்க அந்த நேரத்தில் கோபி போன் பண்ணுகின்றார். இதனால் வீட்டில் நடந்த பிரச்சனைகளை பற்றி இனியா சொல்ல, உடனே எழிலுக்கு கால் பண்ணுகின்றார்.


ஆனால் எழிலின் போன் வேலை செய்யவில்லை. இதனால் அமிர்தாவுக்கு போன் பண்ணி விஷயத்தை கேட்டதோடு எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்க, எழில் சொல்ல வேண்டாம் என  சொல்லுகின்றார். ஆனாலும் அமிர்தா தாம் இருக்கும் இடத்தை  சொல்லி விடுகின்றார்.

இதை தொடர்ந்து கோபி கையில் சாமான்களுடன் நிலாவை வந்து பார்க்கின்றார். மேலும் பாக்கியாவுக்கு பேச, இதுதான் சான்ஸ் என்று என்னையும் அம்மாவை பிரிக்க பார்க்கிறீர்களா என எழில் விலாசுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement