கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் "ரெட்ரோ " திரைப்படம் வருகின்ற மே மாதம் முதலாம் தேதி வெளியாகவுள்ளது.இப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெட்ஜ் நடித்துள்ளார். 65 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப் படத்தினை சூர்யா ஜோதிகாவின் 2d நிறுவனம் தயாரித்துள்ளதுடன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து சிங்கம் புலி ,நாசர் ,ஜெயராம் ,கருணாகரன் போன்ற இசை பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படத்தின் இரண்டு பாடல்களும் வெளியாகி செம வைரலாகியுள்ளது.
இந்த நிலையில் இப் படத்தின் தியேட்டர் உரிமையினை கேரளாவில் துல்கர் சல்மான் வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் படத்தின் ஒரு சில காட்சிகளில் இலங்கை தமிழர் தாக்கப்பட்டுள்ளதாக ஒரு சில வதந்திகள் பரவி வருகின்றன. இயக்குநர் தனது முந்தைய படமான ஜெகமே தந்திரம் படத்தில் லண்டனில் இலங்கை தமிழர்கள் ரௌடிசம் பண்ணுவதாக காட்டி இருந்தார். மேலும் இந்த படத்திலும் இவ்வாறான காட்சிகள் இருப்பது எதிர்பார்க்கப்படலாம்
Listen News!