• Apr 22 2025

டிஆர்பியில் அடிவாங்கும் சீரியல்கள்..!ஜீ தமிழ் எடுத்த அதிரடி நடவடிக்கை...!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சியில் சன் டீவி மற்றும் விஜய் டீவியைத் தொடர்ந்து, தற்பொழுது மக்களுக்கு விருப்பமான மற்றொரு பெரிய சேனலாகத் திகழ்வது ஜீ தமிழ் தான். அந்த சேனலில் ஒளிபரப்பாகும் புத்தம் புதிய சீரியல்கள் மற்றும் மனதைக் கொள்ளை கொள்ளும் சுவாரஸ்யமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்பன தான்  இதற்கு முக்கிய காரணம்.


பொதுவாக, குடும்ப ரசிகர்களின் மனதைப் பறிக்கும் வகையில் காதல், குடும்பத்திடையேயான நெருக்கங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் தொடர்கள், ஒவ்வொரு வீட்டிலும் ஒளிபரப்பாகின்றன. அதே நேரத்தில், விறுவிறுப்பான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை ஈர்த்துவிட்டது ஜீ தமிழ்.

சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் கடந்த சில ஆண்டுகளில் நல்ல விமர்சனங்களையும், மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த ரியாலிட்டி ஷோக்களின் புதிய சீசன்கள் தற்போது சிறப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஜீ தமிழின் முக்கிய தனித்தன்மை என்னவெனில், இத்தொலைக்காட்சி பார்வையாளர்களின் நோக்கத்தைப் புரிந்து, நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் நேரத்தைக் கூட மாற்றுவதைப் பயப்படாமல் செய்கின்றார்கள். தற்போது ரசிகர்களுக்கு மேலும் வசதியாக சில முக்கிய தொடர்களின் நேரமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.


அந்தவகையில் இன்று முதல், மனசெல்லாம் – மதியம் 2.30 மணி முதல் , நானே வருவேன் – மதியம் 3.00 மணி முதல் 4.30 மணி வரை மற்றும் ராமன் தேடிய சீதை – மாலை 4.30க்கு போன்ற நேரங்களில் ஒளிபரப்பாகவுள்ளன. இந்த நேர மாற்றங்கள் மூலம், வீட்டில் இருப்பவர்கள் மற்றும் வேலை முடிந்து வரும் பெண்கள், பெரியவர்கள் ஆகிய அனைவரும் தங்கள் விருப்பமான தொடர்களைப் பதற்றமின்றி பார்க்கும் வசதியை பெற்றுவிடுகின்றனர்.

Advertisement

Advertisement