• Sep 14 2024

வீட்டை விட்டு எஸ்கேப் ஆகும் இனியா? பாக்கியாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியாவை காலேஜில் இருந்து அழைத்துக் கொண்டு ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் வீட்டுக்கு வந்து களைப்பில் அமருகின்றார்கள். ஈஸ்வரி கால் வலிக்குது என்றதும் பாக்கியா அவருக்கு காலில் எண்ணெய் தடவி தூங்க வைக்கின்றார். இதையெல்லாம் பார்த்து இனியா குற்ற உணர்ச்சியில் நிற்க, பாக்கியா மீண்டும் அட்வைஸ் கொடுத்து போகின்றார்.

மறுபக்கம் கோபி தனக்கு யாரும் இல்லை என தனது நண்பரிடம் புலம்பிக் கொண்டிருக்கின்றார். அவர் சென்னை food competition இல் வின் பண்ணின செய்தி பேப்பரில் வந்ததாக சொல்லவும் அவருக்கு சந்தோஷம் கிடைக்கவில்லை. தனது நிலையை எண்ணி கவலைப்படுகின்றார்.


இதைத் தொடர்ந்து ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் செழியன் செட்டில் ஆயிட்டான். எழில் இன்னும் செட்டில் ஆகல குழந்தை பெத்துக்கல, இனியாவுக்கு நல்லபடியா கல்யாணம் ஆகணும் நல்ல வேலைக்கு போகணும் என்று பேசிக் கொண்டிருக்க, இது எல்லாம் தலைகீழா மாறினதுக்கு காரணம் கோபித்தான் என்று பேசுகிறார்கள். மேலும் ராமமூர்த்தி நான் செத்தா கூட இந்த பிணத்தை அவன் பார்க்கக் கூடாது எனக்கு கொல்லி வைக்கக்கூடாது என ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

இறுதியாக இனியா பாக்யாவுடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது நடந்தவற்ற எண்ணி அழுகின்றார். மேலும் தான் உங்களை எல்லாம் விட்டுப் போவதாக லெட்டர் எழுதுகின்றார். இதுதான் என்று எபிசோட்.

Advertisement

Advertisement