பிரபல திரைப்பட விமர்சகர் மற்றும் யூடியூப் பிரபலம் புளூ சட்டை மாறன் சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல் வாதியுமான பவன் கல்யாண் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பொதுவாக, புளூ சட்டை தனது நக்கல் கலந்த விமர்சனம் மற்றும் தெளிவான கருத்துகளால் பிரபலமானவர். அவருடைய விமர்சனங்கள் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இதுவரை பல பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதான விமர்சனங்களைக் கூறியுள்ளார். இப்போது பவன் கல்யாணை நேரடியாக தாக்கி விமர்சித்திருப்பது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

இந்தக் கருத்துகள் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பவன் கல்யாணின் ரசிகர்கள் இதற்கு கடுமையான எதிர்வினையை பதிவு செய்து வருகின்றனர். பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களைக் கொண்ட நடிகர்.
புளூ சட்டை மாறன் பொதுவாக நேர்மையான விமர்சனங்களை முன்வைப்பவர். ஆனால், சில நேரங்களில் அவருடைய விமர்சனங்கள், நடிகர்களின் மதிப்பு குறையும் வகையில் இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. அந்தவகையில் தற்பொழுது பவன் கல்யாண் கதைத்த மொழிப் பிரச்சனையை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "தமிழைப் பற்றி கதைக்கிற நீங்கள் உங்கட படங்களை பார்ப்பதற்கு தமிழர்கள் வர வேண்டாம் என்று சொல்லலாம் தானே என்றார். மேலும் பட வசூலுக்கு மட்டும் தமிழர்கள் தேவையா" எனக் கேட்டார். இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
 
                              
                             
                             
                            _67d6747718402.jpg) 
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!