தமிழ், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் உள்ளிட்ட உலகளாவிய அளவில் மாபெரும் இசையமைப்பாளராக விளங்கும் ஏ.ஆர்.ரகுமான் நேற்று லண்டனிலிருந்து சென்னை திரும்பிய பிறகு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது இசைப்புயல் ரஹ்மானுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாகவும் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
அவருடைய உடல்நிலை குறித்து அக்கறை கொண்ட ரசிகர்கள் ரஹ்மான் எப்படி இருக்கிறார்? என்ற கேள்விகளை சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் எழுப்பி வந்தார்கள். இதனையடுத்து, அவரது மகன் ஏ.ஆர்.அமீன் ரசிகர்களுக்கு உறுதியான தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலம் பற்றி கவலைப்பட்ட நிலையில், அவரின் மகன் ஏ.ஆர்.அமீன் சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "எங்கள் அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி! என் தந்தைக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதால் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர் தற்போது நலமாக இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். உங்கள் அன்பான வார்த்தைகள், ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம்!" என்றார். இந்தத் தகவலை அறிந்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!