• Mar 16 2025

இன்ஸ்டாவில் வைரலான DD Next Level படத்தின் பர்ஸ்ட் லுக்! சந்தோசத்தில் ரசிகர்கள்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பயணத்தைத் தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ள சந்தானம் தற்பொழுது தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். குறிப்பாக, "தில்லுக்கு துட்டு" மற்றும் "DD Returns"  போன்ற ஹாரர் காமெடி திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன.

இதனால், இந்த பிரபலமான " DD Next Level " படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தற்போது " DD Next Level " படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


சினிமா ரசிகர்கள் மத்தியில் " DD Next Level " என்ற புதிய வித்தியாசமான பெயருடன் சந்தானத்தின் படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு பல நகைச்சுவைத் திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். அதனால், இந்தப் படம் மிகுந்த காமெடி மற்றும்  ஹாரர் திருப்பங்களோடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப் படத்தை ஆர்யா தயாரிக்கிறார் என்பது கூடுதல் ஸ்பெஷல்! ஆர்யாவின் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்திற்குப் மேலும் வரவேற்ப்பைச் செய்துள்ளது. இது சந்தானத்திற்கும் ஆர்யாவிற்கும் இடையேயான நெருக்கமான நட்பை வெளிப்படுத்துகிறது. இப்படம் தொடர்பான மேலதிக தகவலுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement

Advertisement