• Oct 16 2024

விஜய் சங்கீதாவுக்கு முதல் யாரைத் திருமணம் செய்ய இருந்தார் தெரியுமா?- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் றுதியாக வெளியாகிய திரைப்படம் தான் லியோ. பல சர்ச்சைளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகி இருந்தாலும் வசூலில் அள்ளிக் குவித்தது. இருப்பினும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனை அடுத்து தன்னுடைய 68வது படத்தில் நடித்து வருகின்றார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, ஜெயராம், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் சமீபத்தில் பாங்காக்கில் நடந்து முடிந்தது. 



தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யும் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். லைகா நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. லைகா பேனரில் ஜேசன் இயக்குநராக அறிமுகமாக விஜய்யின் மனைவி சங்கீதாதான் காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் இப்போது சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதனால் தான் விஜய் நடித்த வாரிசு, லியோ பட விழாக்களுக்கு அவர் வரவில்லை என்ற தகவலும் பரவிக் கொண்டிருக்கின்றது. சங்கீதா ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை ஒரு ரசிகையாக பார்க்க வந்தார். அப்போது அவரை பார்த்த எஸ்.ஏ.சியும், ஷோபாவும் விஜய்க்கு சங்கீதாவை திருமணம் செய்து வைக்கலாம் என முடிவெடுத்து விஜய்யிடம் கேட்க அதற்கு அவரும் க்ரீன் சிக்னல் காட்ட இருவருக்குமான திருமணம் நடந்தது.


 இதற்கிடையே சில முறை இரண்டு பேரும் சந்தித்துக்கொண்டபோது ஏற்கனவே ஒருவரையொருவர் காதலிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சூழலில் விஜய் முதலில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யவிருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

அதாவது விஜய்யின் தாய் ஷோபாவின் தம்பி சுரேந்தர். அவர் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகராக இருந்தவர். அவரது மகளைத்தான் முதலில் விஜய்க்கு திருமணம் செய்துவைக்கும் முடிவில் எஸ்.ஏ.சியும், ஷோபாவும் இருந்ததாகவும் ஆனால் அதற்குள் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் காதல் மலர்ந்ததாலும்; எஸ்.ஏ.சி, ஷோபாவுக்கும் சங்கீதாவை ரொம்பவே பிடித்துப்போக சுரேந்தரின் மகளை எடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார்களாம் என்று கூறியிருக்கின்றார்.


Advertisement