• Jan 18 2025

விரைவில் ஆரம்பமாகும் குக் வித் கோமாளி சீசன் 5... போட்டியாளர்கள் யார்யார் தெரியுமா? அட இவங்களும் இருக்காங்களே...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த நான்கு சீசன்களாக மாபெரும் வெற்றியை கண்டுள்ள குக் வித் கோமாளியின் 5வது சீசன் எப்போது ஆரம்பம் என்று கேள்வி எழுந்துள்ளது.


பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை துவங்குவது தான் விஜய் டிவியின் வழக்கம். ஆகவே விரைவில் குக் வித் கோமாளி ஆரம்பமாக இருக்கிறது என்கின்றனர். வழக்கம் போல் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு நடுவர்களாக இருக்க விஜே ரக்ஷன் மற்றும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்கள்.


அதே போல் சில கோமாளிகள் சீசன் 5ல் தொடருவார்கள் என்றும், சில புதிய கோமாளியின் வரவு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ன் போட்டியாளர்கள் லிஸ்ட் தற்போது லீக்காகியுள்ளது. நடிகை வடிவுக்கரசி,டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தீபா வெங்கட்,தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா,நடிகை மாளவிகா மேனன்,பிக் பாஸ் 7 நடிகர் விஷ்ணு,பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் 'ஹேமா' ,நடன இயக்குனர் ஸ்ரீதர் மகள் அக்ஷதா என்பவர்களை தான் கேட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.


இவர்கள் தான் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இனி வரும் காலங்களில் வெளி வரலாம் என ரசிகர்கள் எதிர் பார்த்து இருக்கின்றனர்.


Advertisement

Advertisement