• Feb 23 2025

சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்கள்... பிக்பாஸ் 7 மணிசந்திரா வெளியிட்ட கலக்கல் வீடியோ- நெகிழ்ந்த பிரபலம்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பல மாற்றங்களுடன், புதிய விஷயங்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த தினேஷ் மற்றும் அர்ச்சனாவால் நிகழ்ச்சியே மாறிவிட்டது.


அடுத்தடுத்து விளையாட்டும் விறுவிறுப்பாக செல்ல ஜனவரியில் 100 நாட்களை கடந்து முடிந்துவிட்டது. இதில் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா மக்கள் மனதை கவர்ந்து வெற்றியாளராக தேர்வாகிவிட்டார்.


அர்ச்சனாவை தொடர்ந்து மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்தவர் தான் மணி. நடனத்தின் மூலம் விஜய் டிவியில் நுழைந்து பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது உண்மையான கேரக்டர் மூலம் மக்களை கவர்ந்துவிட்டார்.


பிக்பாஸ் 7 பிறகு அவருக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஷேர் செய்து மணிசந்திரா தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


Advertisement

Advertisement