• Jan 18 2025

Bigg Boss டைட்டில் வின்னர் அர்ச்சனா... Live வீடியோவில் மக்களிடம் என்ன கூறினார் தெரியுமா? ரொம்ப பிடிச்சது பிரதீப் தானாம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த அர்ச்சனா தற்போது மக்களுடன் லையில் கதைத்திருந்தார். அவர் பிக் பாஸ் தொடர்பான பல விடையங்களை கூறியிருந்தார். 


பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சியில் வையில் கார்ட் என்றி கொடுத்து இறுதியில் மக்களின் அதிகபட்ச ஓட்டுகளினாலும் தனது திறமையினாலும் டைட்டில் வின்னர் ஆனா விஜே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் தான் கலந்து கொண்டது தொடர்பாக பல கருத்துக்களை பகிர்ந்திருந்தார். 


பிக் பாஸ் வீட்டுல 106 நாள் இருந்து இருக்காங்க எல்லாருமே உண்மையாத்தான் இருந்தாங்க. பிரதீப் ப்ரோ தான் ரொம்ப உறுதியான போட்டியாளர் . எனக்கு நிறைய விடையம் சொல்லி கொடுத்து இருக்காரு. அடுத்தது மாயா தான் மத்தவங்க எல்லாரும் ஒரேமாதிரித்தான். எனக்கு புடிச்ச போட்டியாளர் என்றால் அது பிரதீப் தான். அவருக்கு பிறகு புடிச்சதுனா தினேஷ் தான். 


பிக் பாஸ் வீடு 15- 20 வருசத்துல கத்துக்க வேண்டிய விசயத்த 100 நாள்ல கத்து கொடுத்தது என்று தான் சொல்லணும். அந்த வீட்டை தான் நான் ரொம்ப மிஸ் பண்ணுறன் பிக் பாஸ் வாய்ஸ் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுரேன்.


வந்த பிறகு எபிசோட் ஒன்னும் பார்க்க இல்ல, அம்மா அப்பா பார்க்க வேணாம் நாங்க காட்டுறது மட்டும் பாரு என்று சொன்னாங்க அதுனால பார்க்க இல்ல. வெளிய வந்த பிறகு எனக்கு கால் பண்ணவங்களோட கதைச்சன்.


என்னோட அடுத்த பிளான் இனி தான் நான் யோசிக்கணும், எனக்குன்னு பொறுப்பு இருக்கு அத கண்டிப்பா செய்வன் . எனக்கு சப்போட் பண்ணுன எல்லாருக்கும் ரொம்ப நன்றி என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement