டிசம்பர் 20 உன்னி முகுந்தன் நடிப்பில் ஹனீப் அடேனி இயக்கத்தில் தெலுங்கு திரையுலகில் வெளியாகி வசூலில் கொடி கட்டி பறந்த மார்க்கோ திரைப்படத்தினை தற்போது தமிழில் ரீமேக் செய்வதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.
30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கபப்ட்ட இப் படம் 104 கோடி வரை வசூல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இப் படத்தினை விக்ரம் தமிழில் நடிக்க தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பில் உன்னி முகுந்தனை சந்தித்துள்ள விக்ரம் இப் படத்திற்கான ஆரம்ப வேலைகளை தொடங்கியுள்ளதாக செய்தி கசிந்துள்ளது.
தங்களான் திரைப்படத்தினை தொடர்ந்து தனது லைன் அப்பில் "வீர தீர சூரன் ","துருவ நட்ச்சத்திரம்" போன்ற படங்களை வைத்திருக்கும் இவர் தற்போது இப் பட ரீமேக்கிலும் நடிக்க தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.மற்றும் இது குறித்த உத்தியோகபூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!