• Aug 20 2025

புதிய முயற்சியில் களமிறங்கிய மணிகண்டன்..! ஹீரோ யார் தெரியுமா.?

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தரமான கதைகள் மற்றும் அழுத்தமான இயக்கத்துக்காக புகழ்பெற்ற இயக்குநர் மணிகண்டன், தனது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார். இந்தப் புதிய முயற்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் அசோக் செல்வனும், மலையாள சினிமாவைச் சேர்ந்த திறமையான நடிகை நிமிஷா சஜயனும் இணைந்து நடிக்கிறார்கள்.


படத்தின் அதிகாரபூர்வ பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் பூஜை க்ளிக்ஸ் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களிடையே தீவிர எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இந்த புதிய படத்தில் அவர் மனித உறவுகள், நகர வாழ்க்கை மற்றும் சமூக கலாசாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கி இருக்கக்கூடும் என்ற தகவல்கள் திரை வட்டாரங்களில் பரவுகின்றன. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக திபு நினன் தாமஸ் பணியாற்றுகிறார். 

Advertisement

Advertisement