• Jan 19 2025

பிக் பாஸ் 8வது சீசன் எப்போது ஆரம்பம் தெரியுமா? வெளியான அதகள அப்டேட்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இதுவரை இடம் பெற்ற ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வந்த நிலையில், அவருக்கு இருக்கும் படப்பிடிப்புகள் காரணமாக இதிலிருந்து விலகி இருந்தார்.

இதை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனின் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த சீசனில் இதுவரை இல்லாத சர்ச்சை போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழையுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணத்தினால் டிஆர்பி திடீரென எகிறும் நிலையில் காணப்படுகின்றது. இம்முறை பிக் பாஸ் வீட்டில் சாயா சொலின், ரஞ்சித், ஆர்ஜே ஆனந்தி, ஸ்ரீதேவி விஜயகுமார், பப்லூ பிரித்விராஜ் ஆகியோர் செல்ல உள்ளார்களாம்.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 29 அல்லது அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பான அதிகார்வ பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இதன் காரணத்தினால் இந்த வருடமும்  தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என முக்கிய பண்டிகைகள் பிக் பாஸ் வீட்டுக்குள் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement