இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய படமான "ஜனநாயகன்" மேலும் இந்த படத்தில் அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ,கெளதம்மேனன், பாபி தியோல், ப்ரியாமணி என பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இது விஜய் நடிக்கும் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இதனால் "ஜனநாயகன்" படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கிடையில் இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியானது அது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
அந்த அப்டேட் படி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று "ஜனநாயகன்" படத்தின் ப்ரோமோ டீசர் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் படத்தின் மோஷன் போஸ்டர் அல்லது டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு அரிய பரிசாக இருக்கக்கூடும் மேலும் படம் மீதும் அவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Listen News!