கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள "ரெட்ரோ " திரைப்படம் மே முதலாம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளதுடன் சூர்யா -ஜோதிகாவின் 2d நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் படத்தில் வெளியாகிய இரண்டு பாடல்களும் அனைவராலும் வரவேற்கப்பட்டு வைரலாகியது.

மேலும் படத்தின் trailor வீடியோவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் அனைத்தும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று பட புரொமோஷனிற்கு ஆந்திராவிற்கு விஜய் தேவர்கொண்டா கலந்து சிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது திருவனந்தபுரம் பத்மநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சமீபத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து மும்பையில் உள்ள கோவிலில் தரிசனம் செய்திருந்தார். தொடர்ந்து இவர் தனியாக கோவில் தரிசனம் செய்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.

                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!