• Mar 23 2025

விளம்பரப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்த பிரகாஷ் ராஜ்..! என்ன சொன்னார் தெரியுமா?

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகின் பல்முகத் திறமை வாய்ந்த நடிகராகவும் பிரபல பேச்சாளருமான பிரகாஷ் ராஜ், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சூதாட்ட விளம்பரம் பற்றிய விமர்சனத்தால் சிக்கலில் சிக்கியிருந்தார். தற்போது அவர் அந்தப் பிரச்சினைக்கு நேரடியாக விளக்கம் அளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் நடித்த சூதாட்ட விளம்பரம் 2017ம் ஆண்டு வெளியானது. அந்த விளம்பரம் இணையத்தில் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. இதனைப் பார்த்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் எனப் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


இந்த சர்ச்சை குறித்து பிரகாஷ் ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் அதில்  கூறியது, "நான் 2017ல் இந்த விளம்பரத்தில் நடித்தேன். அதற்குப் பிறகு அந்த நிறுவனத்தை 2021ல் வேறொரு நிறுவனம் வாங்கியுள்ளது. தற்பொழுது அந்தப் புதிய நிறுவனம் மீண்டும் என் விளம்பரத்தைக் வெளியிட்டது" என்றார்.

மேலும், நான் உடனடியாக அவர்களுக்கு ஒரு அறிவித்தல் அனுப்பி, அந்த விளம்பரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியதுடன் அது தவறான பயன்பாடாகும் எனவும் தெரிவித்தேன் என்றார். மேலும் தனது பெயரையும், முகத்தையும் தவறாக பயன்படுத்திய அந்த புதிய நிறுவனம் மீது பிரகாஷ் ராஜ் ஒப்பந்த நிபந்தனைகளை மீறி செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement