விடாமுயற்சி படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இருப்பினும் அந்த விடாமுயற்சி அப்டேட்காக ரசிகர்கள் தவமாய் கிடக்கிறார்கள்.

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென நடிகை த்ரிஷா படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துள்ளாராம். படப்பிடிப்பில் சண்டை ஏதாவது நடந்து, கிளம்பி வந்துவிட்டாரா என கேள்வி எழுந்தது.

அதெல்லாம் ஒன்றுமில்லை நகைக்கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. விரைவில் அவர் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இணைந்துவிடுவார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
Listen News!