• Nov 06 2024

அடுத்த படத்திற்கான அறிவிப்பா? விஜய்யுடன் அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தனது 69வது திரைப்படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார். அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் இதுவே தன்னுடைய கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார். இதனால் தளபதி 69 மீது அதிக எதிர் பார்ப்பு உள்ளது. 


இந்நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ள அமரன் திரைப்படம் வருகிற 31ம் தேதி வெளியாகவுள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றினை சிவகார்த்திகேயன் வைத்து இயக்கியுள்ளார் இவர். 


அமரன் படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி முதலில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இடம் துணை இயக்குனராக துப்பாக்கி படத்தில் பணிபுரிந்துள்ளார்.  துப்பாக்கி படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த ராஜ்குமார் பெரியசாமி, தளபதி விஜய்யுடன் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 



Advertisement

Advertisement