• Jan 19 2025

மறைந்த நடிகர் போண்டாமணியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?- இதனால் தான் பெயரை மாற்றினாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான  பவுனு பவுனுதான்  என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் தான் போண்டாமணி. இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட இவர் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதுவரை 270 படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் 

கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது மருத்துவ செலவுக்கு உதவுமாறு பல நடிகர்களிடம் அவர் கோரிக்கை வைத்து வந்த நிலையில் ரஜினிகாந்த், தனுஷ், விஜய்சேதுபதி, மயில்சாமி உள்ளிட்ட பலர் அவருக்கு பணம் கொடுத்து உதவினார்கள்.


இந்நிலையில், நேற்றிரவு உயிரிழந்தார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.நடிகர் போண்டா மணியின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 போண்டா மணியின் உண்மையான பெயர் கேதீஸ்வரனாகும். இவர் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தார். மேலும் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுள்ளார். அந்த நேரத்தில், அவரின் பசியை போக்கியது போண்டா தானாம். தினமும் கையில் இருக்கும் காசை வைத்து போண்டாவை மட்டும் வாங்கி சாப்பிட்டு நிறைய நாட்கள் பசியாற்றி இருக்கிறார். 


ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமாவில் பெயர் மாற்ற வேண்டும் என சொல்லும்போது. பசி தீர்த்த போண்டாவையும், தனது குருநாதர் கவுண்ட மணியின் பெயரில் இருந்து மணியை மட்டும் எடுத்துக்கொண்டு போண்டா மணி என மாற்றிக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement