தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையான சமந்தா ரூத் பிரபு, தனது நடிப்புக்கும், அழகுக்கும் மட்டுமல்லாமல், ஃபேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் தேர்வுகளுக்காகவும் தனித்துவமான இடத்தை பிடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பப்ளிக் நிகழ்வில் அவர் அணிந்திருந்த ஒரு வாட்ச், இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வாட்சின் வடிவமைப்பும், அதன் பிரமாண்டமான விலையும், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. சமந்தா அணிந்திருந்த வாட்ச், சாம்ட்ரெப் - சாய்டல் வடிவிலான பியாஜெட் வாட்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த வாட்ச்சின் விலை ரூ.30 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Listen News!