• Jan 09 2026

கீர்த்தி சுரேஷுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி.! எந்தப் படத்தில் தெரியுமா.?

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகர் விஜய் சேதுபதி, தனது திறமையால் மட்டுமின்றி தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதாலும் மிகவும் பிரபலமாக உள்ளார். இவர் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களிடையே உயர்ந்த மதிப்பை பெற்றுள்ளார்.


தற்பொழுது, விஜய் சேதுபதி அடுத்ததாக தில் ராஜு SVC தயாரிப்பில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு மெகா பட்ஜெட் திரைப்படமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய தெலுங்கு படத்தில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா, கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளனர். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான வில்லன் ரோலில் அவர் ரசிகர்களை மிரட்டக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த படத்தின் தலைப்பாக “Rowdy Janardhan” வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தலைப்பே படத்தின் காமெடி மற்றும் அதிரடி அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.

அதுமட்டுமல்லாது, விஜய் சேதுபதிக்கு இந்த படத்திற்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement