• Jan 08 2026

என்னம்மா நீங்க இப்புடி பண்ணுறீங்களே.! விஜய்க்காக ரசிகை செய்த அசத்தலான காரியம்.! படுவைரல்

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய், தமிழக அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளிலும் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பெற்று வருகிறார். விஜயின் ஒவ்வொரு செயலும், அரசியல் முன்மொழிவும், பொதுக் கூட்டங்களும் பொதுமக்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது.

சமீபத்தில் கரூரில் விஜய்யின் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்ற போது, சில துயரமான சம்பவங்கள் நிகழ்ந்தது. அதில் பலர் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் இதற்கு மத்தியில் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.


இந்நிலையில், விஜய் மீண்டும் புதுச்சேரியில் பொதுக் கூட்டம் நடத்துகின்றார். இன்று நடைபெறும் இந்த கூட்டம் ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய பொதுக் கூட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களில் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஒரு பெண் ரசிகை, கடந்த கரூர் சம்பவத்தை நினைத்து, “கரூரில் நடந்த மாதிரி இங்கு நடக்க கூடாது.


தளபதி நல்ல முறையில் புதுச்சேரி வந்து போகணும். புதுச்சேரிக்கு மாற்றம் வரணும். அவர் சீக்கிரமே முதலமைச்சர் ஆகணும் என்று மொட்டை அடித்துள்ளார். அத்துடன், தனது முடியை அடையார் கேன்சர் மையத்துக்கு தானமாகவும் வழங்கியுள்ளார்.”

அந்த பெண் ரசிகையின் கருத்தும், புகைப்படங்களும் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement