• Jan 18 2025

ஒரே படத்தில் அட்லீயை ஓரங்கட்டிய நெல்சன்... இத்தனை கோடி சம்பளமா... சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

2018 இல் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் திரைத்துறையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து டைம்ஸ் ஆப் பத்திரிக்கையின் 2018 ஆம் ஆண்டின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் நெல்சன்.


சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் கூட்டணியுடன் களம் இறங்கிய நெல்சன், டாக்டர் படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தார். வெற்றி இயக்குனராக வலம் வந்த நெல்சன் தனது மூன்றாவது படமான பீஸ்ட் இல் விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கை கோர்த்தார். பல எதிர்மறையான விமர்சனங்களுக்கு பின்னும் இப்படம் வசூலில் 300 கோடியை எட்டியது.


பீஸ்ட்டின் எதிர்மறையான விமர்சனங்களினால் நெல்சன், ஜெயிலர் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் இருப்பினும் ரஜினி கொடுத்த உற்சாகத்தால் பலமொழி சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஜெயிலரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜெயிலர் இந்த ஆண்டு வெளியாகி தமிழ்நாட்டில் மட்டுமே 240 கோடியை எட்டியது.


தமிழ்நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் பட்டியலில் அட்லி, சங்கர், ஏ ஆர் முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் வரிசையில் ஏழாவது இடத்தை பிடித்துள்ள நெல்சனின் சொத்து மதிப்பு 95 கோடிக்கும் அதிகம் என அறியப்படுகிறது.


கோலமாவு கோகிலா படத்தில் 5 கோடி எனத் தொடங்கிய நெல்சனின் சம்பளம் தனது அடுத்த அடுத்த படங்களுக்கு சம்பளத்தை ஐந்தின் மடங்காக உயர்த்தினார். டாக்டரில் 15 கோடியாகவும் பீஸ்ட் இல் 25 கோடியாகவும் உயர்த்தினார் எதிர்மறை விமர்சனங்களினால் பாதிக்கப்பட்ட நெல்சன் ஜெயிலர் படத்திற்காக 10 கோடி சம்பளமாக வாங்கினார்.


தற்போது ஜெயிலரின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் தனது அடுத்த படத்தின் சம்பளத்தை 55 கோடியாக உயர்த்தி உள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் பட்டியலில் அட்லியைப் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement