• Jan 18 2025

சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கருங்காலி மாலையை அணிந்ததால் இந்த பிரச்சினை வந்ததா?- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாக வெள்ளித்திரை பிரபலங்களான பலர் கருங்காலி மாலை கழுத்தில் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்ற பிரபலங்கள் கருங்காலி மாலைகளை தமது கழுத்தில் அணிந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படி இவர்கள் கருங்காலி மாலை அணிந்திருப்பது குறித்து வலைப்பேச்சு அந்தணன், ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,சமீபத்தில் சிவகார்த்திகேயன் பேட்டி அளித்த போது அதில் கருங்காலி மாலை அணிந்திருந்தார். அது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, இந்த மாலை போட்டால் நல்லது என்று சொன்னார்கள் என்பதால் போட்டு இருக்கிறேன் என்றார். 


இதனால், பிரபலங்கள் பலரும் கருங்காலி மாலை அணியத் தொடங்கினார்கள்.ஆனால், உண்மையில் கருங்காலி மாலையால் சிவகார்த்திகேயனுக்கு நல்லது நடக்கவில்லை, அது அணியாத வரை அவரின் படங்களுக்கு நல்ல பெயரும் இருந்தது. ஆனால், தற்போது இமான் விவகாரத்தில் அவருடைய பெயர் அடிபட்டு, அவருக்கு பெண்கள் இடத்தில் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

 தற்போது வெளியாக இருக்கும் அயலான் படம் ஓடுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதனால், சிவகார்த்திகேயன் தற்போது கருங்காலி மாலையை கழட்டி உள்ளார். அதே போல,லோகேஷ் கனகராஜிக்கு லியோ படம் வருவதற்கு முன்பு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்து இருந்தது. ஆனால், லியோ படத்திற்கு பின் படம் ஒரு குப்பை என பல மோசமான விமர்சனங்கள் லோகேஷ் கனகராஜ் மீது எழந்தது. 


தற்போது அவர் ரஜினி படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை அவர் நிம்மதியாக எடுப்பாரா என்று தெரியவில்லை என்றார். மேலும் கருங்காலி மாலை கருங்காலித் தனமான வேலையை செய்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement